தகைமையுள்ளோருக்கு அரசவேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த கோரிக்கை!

Thursday, November 24th, 2016

சமகால இளைஞர்களே அடுத்துவரும் எமது சந்ததியினருக்கான தீர்க்கமான எதிர்காலத்தைப் படைக்கக் கூடியவர்கள்.  எமது இளைஞர்களுக்கு விழிப்புணர்வு இருந்தால் மட்டும் போதாது.  கடந்த கால அனுபவங்களைப் படிப்பினைகளாகக் கொண்டு மட்டுமே எமது இளைஞர்கள் விழிப்புணர்வுகொண்டு எழவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

எமது இளைஞர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் அல்ல.  அவர்கள் தமிழ் அரசியல் தலைமைகளுக்கே அறிவூட்டும் ஆற்றலைக் கொண்டிருக்கவேண்டும்.  மாறாக, தமிழ் பேசும் இளைஞர்கள் அர்த்தமற்ற வன்முறைகளுக்குத் தூபமிடுவோரின் பின்னால் செல்லும் நிலைமைகளுக்கு இந்த அரசாங்கம் வழிவகுக்கக் கூடாது என்பதே எமது விருப்பமாகும்.

ஆகவே, உண்மையாகவே அரசியல் உரிமைகள் குறித்து இலட்சியக் கனவுகளோடு வாழும் எமது இளைஞர்களின் கனவுகள் விரைவாக நிறைவேற்றப்படவேண்டும்.  இதேவேளை தகைமை யுள்ளவர்களுக்கு அரச வேலைவாய்ப்பும் அந்தத் தகைமையில்லாதோருக்குத் தொழிற்துறைகளை நிறுவி அதன்மூலம் வேலைவாய்ப்பும் வழங்கப்படவேண்டும்.  இதன்மூலம் எமது இளைஞர்களை நாம் சரியான திசைவழி நோக்கிக் கொண்டுவர முடியும்.  அத்துடன் பொதுமக்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்கின்ற ஊர்வலங்கள், போராட்டங்கள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பொலிசார் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள், அம்மக்கள் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் மீறாது பாதுகாத்துக் கொள்ளும்வகையில் மட்டுமே அமையவேண்டும். அத்துடன் அம்மக்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றை மதிக்கின்ற செயற்பாடுகளாகவும் அவை அமையவேண்டுமென இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

04

Related posts:

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் - நாடாளும...
குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் ...
வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நேரில் சென்று கள...