மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து!

Monday, July 20th, 2020

மயிலிட்டி மீன்பிடி துறை முகத்தினை பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி்ன் முயற்சியினால் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நீண்டகாலமாக இருந்துவந்த குறித்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் தொழிலாளர்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அத்துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு பலநாள் மீன்பிடி கலங்கள் உள்ளிட்ட பல மீன்பிடிக் கலங்கள் அத்துறைமுகத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அங்கு எரிபொருள் நிரப்புவதில் சிக்கல் நிலை உருவாகியிருந்தது.

இந்நிலையில், அத்துறைமுக நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்தக்கு குறித்த விடயத்தை கொண்டுவந்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்றையதினம் எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த உடன்படிக்கையில் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் வடிவேலு சத்தியநாதன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இடையே கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா
போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவிப்பு
தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலையின் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரி...