வட்டுவாகல் முகத்துவார தீர்த்தக்கரை வீதி தொடர்பில் பொதுமக்கள் முறையீடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக சென்று ஆராய்வு!

Thursday, February 16th, 2023

பொது மக்கள் பாவனைக்கு தடை செய்யப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள  முல்லைத்தீவு, வட்டுவாகல் முகத்துவாரந்திற்கு செல்வதற்கான தீர்த்தக்கரை வீதியை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் பார்வையிட்டனர்.

குறித்த வீதி தடை செய்யப்பட்டுள்ளமையினால் பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 300 கடற்றொழிலாளர் குடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பாதிக்கப்படுவோரால் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அண்மையில் தைப் பொங்கல் விழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனினால் இந்த விவகாரம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

அதன்போது, நேரடியாக கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு நில பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடி சுமூகமான தீர்வு காணப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு அதிகாரிகள் சகிதம் விஜயம் செய்துள்ள கடற்றொழில் அமைச்சர், குறித்த பாதையை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்துள்ளார். – 16.02.2023

000

Related posts:

ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் எப்போது அமைக்கப்படும்! நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா  கேள்வி! (...
சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது - நாடாளுமன்றத்தி...
யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட...

இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலி கிழக்கு பிரதேச விவசாயிகள் நன்றி தெரி...
முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆ...
மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை : வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...