சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

Friday, September 8th, 2017

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்ட வறட்சியின் தாக்கம், திடீர் வெள்ளப்பெருக்கு,சூழல் மாசடைவதால் ஏற்பட்ட தாக்கங்களை நீக்குவதற்கும், நிலைபேறான அபிவிருத்தியை உருவாக்குவதற்கும்,பொதுப்படு கடனை மீளச் செலுத்துவதற்கும்,நாளாந்த செலவினங்களைச் செய்வதற்கும்,பொருளாதாரம் சார்ந்த அபிவிருத்தித் துறைகளுக்கும் மட்டுமல்லாது கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பை அதிகரித்தல் போன்ற துறைகளுக்கும் அவற்றின் செலவினங்களுக்கும் ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டின்     இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில்  உரையபற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

2017ஆம் ஆண்டின் உள்நாட்டு அரசிறைச் சட்ட மூலமானது அரசிறைச்; சட்டங்களிலுள்ள குறைபாடுகளைத் திருத்திருத்துவதற்கும் இறைவரித் திணைக்களத்தின் செயற்பாடுகளின் வினைத்திறனை கூட்டுவதற்கும்,வரி ஏய்ப்புக்களைத் தவிர்ப்பதற்கும்,வரிவருமானத்தை அதிகரித்து பொருளாதாரச் சமநிலையை ஏற்படுத்துவதற்கும் வகை செய்யும் முகமாக கொண்டுவரப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.

கூட்டாட்சி அரசாங்கத்தின் மிக முக்கியமான கொள்கையில் ஒன்றாக, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அளவிற்குள் நிதிப்பற்றாக்குறையை மொத்தத் தேசிய உற்பத்தியின் 3.5 வீதமாகக் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால் இச் சட்டமூலத்தில் குறிப்பிட்டுள்ளவாறு புதிய அரசிறைச் சட்டத்தை சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது முக்கியமானதாகும். தேக்கநிலையிலுள்ள பொருளாதாரத்தை இச்சட்டத்தின் ஏற்பாடுகள் ஊக்கியாகத் தொழிற்பட்டு வரி வருமானத்தை அதிகரிக்கச் செய்யுமென நம்புகின்றேன்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்ட வறட்சியின் தாக்கம், திடீர் வெள்ளப்பெருக்கு,சூழல் மாசடைவதால் ஏற்பட்ட தாக்கங்களை நீக்குவதற்கும், நிலைபேறான அபிவிருத்தியை உருவாக்குவதற்கும்,பொதுப்படு கடனை மீளச் செலுத்துவதற்கும்,நாளாந்த செலவினங்களைச் செய்வதற்கும்,பொருளாதாரம் சார்ந்த அபிவிருத்தித் துறைகளுக்கும் மட்டுமல்லாது கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பை அதிகரித்தல் போன்ற துறைகளுக்கும் அவற்றின் செலவினங்களுக்கும் ஏற்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இயற்கையின் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரசினால் வழங்கப்படும் தொகையானது தற்போதைய பண வீக்கத்தின் காரணமாக தமது அத்தியாவசியத் தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கின்றது. எனவே சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை, பண வீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்கக்கூடிய வகையில் அதிகரித்து வழங்க தேவையான நிதி ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டும். வரிச் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலமாக ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியை குறைப்பதற்கும் பிரேரிக்கப்பட்ட வரிச் சீர் திருத்தங்கள் ஆவன செய்யும் என்று நம்புகின்றேன்.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை 5.4 வீதமாகக் குறைப்பதற்கு எடுத்த நடவடிக்கைகள்இந்த கூட்டாட்சி அரசாங்கத்தின் சாதனை என்றே குறிப்பிட வேண்டு;;ம். இதே வினைத்திறமையை தற்போதைய நிதியமைச்சரும் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பதோடு புதிய இறைவரித் திட்டத்தை வினைத்திறன் வாய்ந்த வகையில் பயன்படுத்திக் கொண்டால் 2020ஆம் ஆண்டளவில் நிதிப்பற்றாக்குறையை மொத்தத் தேசிய உற்பத்தியில் 3.5 ஆகக் குறைப்பது சாத்தியப்படும் என்றும்நம்புகின்றேன். இந்த இலக்கை அடைவதற்கும் இப்பொழுதில் இருந்தே அரசிறை வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கல்வி மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திகளுக்கான முதலீட்டுச் செலவீனங்களையும் அதிகரிக்க வேண்டிய அதேவேளை இலங்கையின் சமநிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புக்களை சீர் செய்வதற்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நிதி அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன்.

நமது நாட்டின் மிக முக்கியமான கடந்தகால பிரச்சனைகளில் ஒன்று அரச வருமானமானது மிகப் பலவீனமாக இருப்பதாகும். பாதீட்டுக்களை தயார் செய்து சமர்ப்பிக்கும் போதும் கூட அதனைப் பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய விதத்தில் தேவையான அளவு வருமானத்தை அரசு பெற்றுக்கொள்ளவில்லை. தற்போதைய அரசின் பாரிய பிரச்சினையானது தனது செலவீனங்களுக்கு மட்டுமல்லாது கடன்களை மீளச் செலுத்துவதற்கான வருமானத்தையும் கொண்டிராத நிலைமையே. இந் நிலைமையை நாம் கட்டுப்படுத்தாவிடில் நாடு வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளப்படக்கூடும்.

நமது பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் இடத்து இலங்கைதான் அரசிறை வருமான சேர்ப்பில் பின்தங்கிய நிலையிலுள்ளது. தற்போதைய பொருளாதார நிலையை நாம் கணக்கில் எடுத்தால் மொத்தத் தேசிய உற்பத்தியில் குறைந்தது 20 சதவீதமான வருமானம் வரி சேகரிப்பின் மூலம் பெறப்பட வேண்டும். ஆனால் நாங்கள் இந்த நிலையை இன்னும் அடையவில்லை.

மொத்த வரி வருமானத்தில் மறைமுக வரியின் அளவு அதிகமாக உள்ளமையே தற்போதைய வரிமுறையிலுள்ள முக்கியமான குறைபாடாகும். இதை வேறு விதமாகச் சொல்லப்போனால் மொத்த அரசாங்க வரி வருமானத்தில் 80 சதவீதமானவை மறைமுக வரியாகவே உள்ளது. இதன் தாற்பரியம் என்னவென்றால் இலங்கையின் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் பெரும்பகுதி நுகர்வோர் வழியாக வருமானம் குறைந்த மக்களை மிக அதிக அளவில் பாதிக்கப்படுவதே ஆகும். இந்நிலைமையானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலில் பாதிப்புக்களையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதன் விளைவு என்னவென்றால் அதிக வருமானம் உழைப்போர் வருமான வரியை கட்டுவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்ற அதேவேளை, வருமானம் குறைந்த மக்கள் தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொழுது வரிப்பொறிமுறைக்குள் சிக்கிக்கொள்கின்றார்கள். இப்பிரச்சனைக்கு புதிய அரசிறைச் சட்டம் பரிகாரம் காணும் என்று நான் நம்புகின்றேன். எனவே மறைமுக வரியை 60 சதவீதமாகக் குறைப்பது வருமானம் குறைந்த மக்களுடைய வரிச்சுமையைக் குறைக்க ஏதுவாக அமையும்.

அரசாங்கம் மறைமுக வரிமூலம் வரிசேர்ப்தற்கான காரணம் மறைமுக வரியை மிக இலகுவாகச் சேகரிக்கக் கூடியதாக உள்ளதே ஆகும். வரி ஏய்ப்பில் மற்றும் வரி செலுத்தாமல் தப்பிக்கும் அளவானது நேரடி வரியைப்பார்க்கிலும் மறைமுக வரியில் மிகக் குறைவாகும். அரசாங்கத்திற்கு நேரடி வரியைத் திரட்ட ஆகும் நிர்வாகச் செலவானது மிக அதிகமாகும். இச் செலவைத் தவிர்ப்பதற்காகவும் இலகுவாக வரியைத் திரட்டுவதற்காகவும் மறைமுக வரி பயன்படுத்தப்படுகின்றது.

இச்சட்ட ஏற்பாடுகள் வட – கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்டு புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பித்துப் பொருளாதாரத்திற்கு பங்களிப்;புச் செய்பவர்களுக்கும்,வெளிநாட்டு முதலீடுகளை வட – கிழக்கிற்கு கொண்டு வந்து முதலீடு செய்பவர்களையும் பாதிக்கச் செய்யாமல் இருப்பதுடன் ஊக்கிவிக்கவும் வேண்டும். எனவே கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் நான் இங்கு கூறியவற்றைக் கவனத்தில் கொண்டு புதிய தொழில் முயற்சியாளர்களுக்கும் வடக்கு – கிழக்கில் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்துள்ளவர்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்க 2018ஆம் நிதியாண்டிலாவது வழிவகை செய்யவேண்டும். இது தவிரவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு சட்டத்தை செயற்படுத்தும் பொழுது அது தொடர்பான விழிப்புணர்வூட்டலை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றுகேட்டுக்கொள்கின்றேன்.

வரிகட்டக்கூடிய மக்கள், வரி கட்டுவதை சட்டத்தின் தேவையைத் திருப்தி செய்வதற்காக மட்டும் அல்;லாமல், தாய் நாட்டிற்கான ஒரு சேவையாக முன்வந்து வரி கட்ட வேண்டும். அவ்வாறு முன் வந்து கட்டுபவர்களை கௌரவிக்கும் முகமாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விசுவாச அட்டைகளை (டுழலயடவல ஊயசன – லோயலிட்டி காட்) வரி கட்டுபவர்களுக்கு வழங்குவதுடன், அவ்வாறானவர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகளையும்அரசாங்கம் வழங்க வேண்டும். உதாரணமாக,காலந் தவறாது வரி கட்டுபவர்களுக்கு உள்நாட்டு வணக்க வழிபாடுகளுக்கும் சுற்றுலா செல்வதற்கும் பல்வேறு விதத்தில் ஊக்குவித்து உதவிபுரியலாம். அவ்வாறான ஊக்குவிப்புகளால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை மக்கள் நேய (Pநழிடந குசநைனெடல) திணைக்களமாகப் புனர்ஜீவனமளிக்கலாம். இறைவரித் திணைக்கள அதிகாரிகள் மக்களைச் சந்தேக நபர்களாக நடத்தாமல் மக்களின் நம்பிக்கையை வென்று வரி முகாமைத்துவத்தை வினைத்திறன் உடன் செய்து வரி சேகரிப்பைச் செய்ய வேண்டும். எனது அபிப்பிராயத்தில் வரி முகாமைத்துவமும் வரிசேகரிப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றதாகும்.

கௌரவ நிதி அமைச்சர் அவர்கள் அவருடைய பதவிக்காலத்தில் யுத்தத்தால் எல்லா வகையிலும் அழிவடைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களின் கட்டமைப்புக்களை விருத்தி செய்வதற்கும், வணிக முயற்சிகளைக் கூட்டுவதற்கும்,சுயதொழில் வாய்ப்புக்களையும், ஏனைய தொழில் வாய்ப்புக்களையும் எமது பிரதேச மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு விN~டமான திட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கில் பெயரளவில் தொழில் பேட்டைகளுக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளனவே தவிர, செயற்பாடற்ற தொழில் பேட்டைகளே அங்கு இருக்கின்றன. அத்தகைய தொழில் பேட்டைகளை பயனுள்ளவகையில் இயக்குவதற்கும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தித் தொழில்துறைகளை மேம்படுத்துவதற்கும் முயற்சிக்கும் இளைஞர், யுவதிகளுக்கு கடன் வசதிகளையும், வரிச் சலுகைகளையும் வழங்குவதன் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts:

மன்னார்ப் பகுதி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டிவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
மக்களுக்கு சரியான வழியைக்காட்டும் தலைமை இல்லாதிருந்த  பெருங்குறையை டக்ளஸ் தேவானந்தா நிவர்த்திசெய்து ...
கொரோனா குறித்த யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டக்...

“செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெயரைப் பயன்படுத்தி இந்தியக் கலைஞருக்கு மிரட்டல்” என்று சமூக ஊ...
“கஜா”வை எதிர்கொள்ள அதிகாரிகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத...
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஈ.பி...