இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலி கிழக்கு பிரதேச விவசாயிகள் நன்றி தெரிவிப்பு!

Thursday, January 21st, 2021

அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி பயிர்ச் செய்கையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிக்கு குறித்த பகுதி விவசாயிகள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்னர்.

யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்த 2155 வாழைப் பயிர் செய்கையாளர்களுக்கு சுமார் 25.5 மில்லியன் ரூபாய்களும் 47 பப்பாசிப் பயிர்செய்கையாளர்களுக்கு சுமார் 3 இலட்சம் ரூபாய்களும்   இழப்பீடக வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

முன்பதாக கடந்த வருடம் மே மாதம் வீசிய அம்பன் புயல் காரணமாக யாழ்பபாணத்தில் கோப்பாய் ஊரெழு அச்சுவேலி உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இருந்த பப்பாசி மற்றும் வாழைத் தோட்டங்கள் சுமார் 500 ஏக்கர் வரையில் அழிவடைந்திருந்தன.

இந்நிலையில் நாட்டை அச்சுறுது;தும் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று நிலமைகளை அவதானித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏற்பட்ட அழிவுகளுக்கு அரசாங்கதினால் நஸ்டஈடு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்திருந்தார்.

இருப்பினும், பப்பாசி மற்றும் வாழை தோட்டங்கள் அழிவடைகின்ற போது நஸ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் எவையும் விவசாய அமைச்சிடமோ அல்லது அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடமோ இல்லாத நிலையில் நஸ்டஈடு வழங்குவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த விடயத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், விசேட அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக குறித்த அழிவுகளுக்கு நஸ்ட ஈட்டினை வழங்குதவற்கு ஜனாதிபதியினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அமைச்சவை அங்கீகாரமும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த நஷ்ட ஈடுகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்ப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலிகாமம் கிழக்கு விவசாயிகள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உரிமைகளை வென்றெடுக்க பிராந்தியக்கூட்டு! வளமான தேசத்தை உருவாக்க தேசியக்கூட்டு!! - டக்ளஸ் தேவானந்தா
எங்கே இறுதி யுத்தம் நடைபெற்றதோ அங்கே நினைவுத் தூபி அமைய வேண்டும் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்...
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர்களான ரோஹித அபயகுணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்த...