வடக்கிலும்  சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, December 8th, 2016

இலங்கையில் தற்போது சுற்றுலாத்துறைப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகின்றது. அதே நேரம், கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சைப் பொறுத்த வரையில் அமைசர் அவர்கள் ஆயர்களது கூட்டங்களிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருவதால், பாரபட்சமற்ற வகையில் அனைத்துப் பகுதிகளுக்குமான சமய அலுவல்களை அவர் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் கௌரவ அமைச்சர் ஜோன் அமரதுங்ஹ அவர்கள் முன்னnடுத்த வருகின்ற நடவடிக்கைகள்  பாராட்டத்தக்கவையாக உள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (08) வரவு – செலவுத் திட்டத்தின் புத்ததாசன அமைச்சு, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சுத் தொடர்பான குழு நிலை விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து  தெரிவிக்கையில் –

அந்த வகையில், தற்போது அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளால் வளர்ச்சி பெற்று வருகின்ற எமது சுற்றுலாத்துறையின் விரிவாக்கம் – மேம்பாடு கருதி வடக்கின் சுற்றுலாத் தளங்களையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. வடக்கை நோக்கியும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு இந்த ஏற்பாடுகள் அவசியமாகும் எனக் கருதுகின்றேன்.

குறிப்பாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக, கூட்டாக வருவோர் உட்பட வடக்கின் கரையோரப் பகுதிகளை அதிகமாக நாடி வருகின்றனர். இந்தப் பகுதிகளிலேயே அதிக காலத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாட்டி மற்றும் கசுரினா கடற்கரைகள், காரை நகர் கடற்கோட்டை, காங்கேசன்துறை கடற்கரை, பருத்தித்துறை, நெடுந்தீவு, நயினாதீவு போன்ற இடங்கள் இவற்றுள் முக்கியத்துவம் பெறுகின்றன.

எனவே, இந்த இடங்களை அதிக அபிவிருத்தி செய்வதற்கும், அதே நேரம், தற்போதைய நிலையில் நெடுந்தீவு, நயினாதீவு போன்ற தீவுப் பகுதிகளை நோக்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்ப படகு போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதற்கும், அந்தப் பகுதிகளில் விடுதிகள் மற்றும் சிறந்த உணவு வகைகளை அவர்கள் பெற்றுக் கொள்வதற்கும், உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியமாகவுள்ளது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புவதுடன், வடக்கில் மேலும் பல சிறந்த – இயற்கை செழிப்புமிகு இடங்கள் உள்ளன. அவற்றையும் இனங்கண்டு விருத்தி செய்வதற்கும் கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-3 copy

Related posts:

கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக...
வெடுக்குநாரி ஆதி சிவன் கோயிலுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!