மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, February 29th, 2024


…………..
மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் வகையிலான தனியார் போக்குவரத்து சேவையினரின் செயற்பாடுகள் விரும்பத்தகாத செயல் என சுடிக்காடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாடுகள் இனியொருபோதும் ஏற்படாதிருக்கும் வகையில் இருப்பது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்

வடமாகாணம் தழுவிய ரீதியில் தனியார் போக்குவரத்து சேவையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பில் தீர்வு காண்பதற்கான கூட்டம் ஒன்று ஆளுநர் அலுவலகத்தில் .
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் சாள்ஸ் ஆகியோர் தனியார் மற்றும் அரச போக்குவரத்து துறையினருடன் கலந்துரையாடலொன்றை இன்று மாலை (29.02.2024) மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில் –

தனியார் போக்குவரத்து சேவையையை முன்னெடுப்போர் தமது கோரிக்கையை வெளிப்படுத்துப்வகையிலான போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுப்பதில் தவறுகள் ஏதும் இருக்கப்போவதில்லை.

அது அவர்களது அடிப்படை உரிமையும் கூட.

ஆனால் மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் வகையில் அரச போக்குவரத்து சேவையை முடக்கி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திய அவர்களது செயலை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது முற்றிலும் வெறுக்கத்தக்க செயல். இதேவேளை இவ்வாறான மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் இனியொருபோதும் ஏற்படாதிருக்கும் வகையில் தமது கோரிக்கைகளை வெளிப்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்

இதேவாளை குறித்த பிரச்சினைக்கான தீர்வைக்காண ஆளுநர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு இருதரப்பு நியாயங்களும் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் இறுதி முடிவை ஆளுநர் அறிவிப்பார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

மாலைதீவு தடுப்புக் காவலில் இருந்து விடுதலையான தென்னிலங்கை மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு ...
சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - சமுர்த்தி பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
தாளையடியில் உருவாகுகின்றது யாழ் - கிளிநொச்சிக்கான உவர்நீரை குடிநீராக்கும் திட்டம் – செழுமைப்படுத்துவ...

மாகாண சபை முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் எமது மக்களின் வறுமை இல்லாது போயிருக்கும் - செயலாளர் நாயக...
சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக கடற்றொழிலாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ...
அம்பன், அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வ...