நீண்டகால முயற்சி – தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது பயணிகள் கப்பல் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமால் சிறிபால டி சில்வா உள்ளடங்கலான அதிகாரிகள் வரவேற்பு!

Saturday, October 14th, 2023

40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) மீண்டும் ஆரம்பமாகியது.

இந்நிலையில் இந்தியா நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் இன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட கப்பல் காங்கேசன்துறையை பிற்பகல் 12.30 அளவில் வந்தடைந்தது.

இதேநேரம் தமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நீண்டகால முயற்சிக்குப் பின்னர் இன்று சாத்தியமாகியுள்ளது.

நாகபட்டினத்திலிருந்து முதலாவது கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.  முதலாவது கப்பல் சேவையில் வருகை தந்த இந்திய அதிகாரிகளையும், பயணிகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளடங்கலான அதிகாரிகள் வரவேற்றனர்.

காங்கேசன்துறை வந்த செரியாபாணி கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டு கப்பலை வரவேற்றனர்.

முன்பதாக நாகப்பட்டினத்திலிருந்து 50 பயணிகளுடன் இன்று காலை 7.00 மணிக்கு பயணிகள் கப்பல் காங்கேசன்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.

பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியிலிருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்திருந்நதார்.

இந்த செரியாபாணி கப்பல் பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் நாகபட்டினம் நோக்கி 30 பயணிகளுடன் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் ச...
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்ப...