அட்டை பிடிப்பவர்களால் மீன் பிடிப்பவர்கள் பாதிப்பு – சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, June 24th, 2017

வடபகுதியில் சுமார் 200 வரையிலான கடற்றொழிலாளர்களுக்கு அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்;, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடல்தூரத்தைவிட குறைந்தளவு தூரத்தில் இவர்கள் மின் வெளிச்சம் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதாலும், அப்பகுதிகளை கலக்குவதால், மீனினங்கள் கலைந்து செல்வதாலும், கரைப் பகுதிகளை பயண வழிகளாகக் கொள்வதால், சிறு தொழிலாளர்களது வலைகளை ஊடறுத்துச் செல்வதாலும் சிறு தொழிலாளர்கள் தொழில் ரீதியிலான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதாகவும், மேற்படி அட்டை பிடிப்போருக்கு யாழ்ப்பாணக் கடல் பகுதிகளில் இரவில் தொழில் செய்ய அனுமதியில்லாத நிலை இருந்தும், அவர்கள் இரவு வேளைகளிலும் தொழிலில் ஈடுபடுவதாகவும், இவர்களது தொழில் செயற்பாடுகளால் மீனினங்களுக்கான உணவு வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் கடற்றொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்விடயம் குறித்து உடனடி அவதானங்களைச் செலுத்தி, மேற்படி தடை செய்யப்பட்ட தொழில் முறைமைகளை நிறுத்துவதற்கும், வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கேற்ப அவர்கள் தொழில் செய்வதை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலளாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கிறேன் என்றும் என அவர் தெரிவித்தள்ளார்.

Related posts:

எமது மக்கள் கையேந்து நிலைக்கு காரணம் தவறான தமிழ் அரசியல் தலைமைகளே - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு
யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டு...
தமிழ் மக்களின் பல கோரிக்கைகளுடன் இந்தியா செல்கின்றேன் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!