புலம்பெயர் இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை : ஆராயும் குழுவில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 17th, 2016

 

எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்குவது குறித்து ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள தலைமையில் குறித்த  20 பேர் உள்ளடங்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார்.

வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர்ந்த இலங்கையர்கள் மற்றும் தொழில் வாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் வாக்களிப்பதற்காக அவர்கள் இருக்கும் நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களில் விஷேட வாக்குச்சாவடிகள் அமைத்து அவர்கள் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

123

Related posts:


பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் அரசு உரிழய கவனம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
மின்சார நெருக்கடி ஏற்படுமென ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாதிருந்தது ஏன் -...
சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - சமுர்த்தி பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!