இரத்தம் சிந்த அழைக்கவில்லை!… வியர்வை சிந்தி முன்னேறவே அழைக்கிறேன்!.. – டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 30th, 2017

கொடிய யுத்தத்தால் பாரிய உயிருடமை அழிவுகளுக்கு உள்ளாகியிருந்த கிழக்குப் பகுதியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம் இங்கு உணரப்பட்டுள்ளபோதிலும் இது விடயத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை கூறிக்கொள்வோர் எவ்வித அக்கறையையும் செலுத்தாமலுள்ளமையானது எனக்கு மிகுந்த வேதனையை தருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

கடந்த காலங்களில் மட்டுமல்லாது நிகழ்காலத்திலும் கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றும்விதமான பல்வேறு உட்கட்டுமாணம் உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்கக்கூடியதான வாய்ப்புகள் இருந்துவருகின்றன.

ஆனாலும் மக்களின் வாக்குகளை அதிகளவில் அபகரித்துக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணசபையில் மத்திய அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தபோதிலும் இற்றைவரையில் எவ்விதமான அபிவிருத்திகளையும் குறிப்பிடும் படியாக மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்து மக்கள் ஓரளவுக்கு தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதிலும் இங்கு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் இடர்பாடுகளையும் என்னால் அறிந்துகொள்ளமுடிகின்றது

ஆனாலும் கடந்த காலங்களில் மக்கள் எனக்கு தந்த அரசியல் அதிகாரங்களை கொண்டு முடியுமானளவு மக்கள் பணிகளை செய்து காட்டியுள்ளேள். அந்தவகையில் எதிர்காலத்திலும் மக்கள் என்மீது நம்பிக்கைவைத்து அணிதிரள்வார்களேயானால் எமது மக்களது அபிலாஷைகளையும் தேவைப்பாடுகளையும் நிச்சயம் என்னால் வென்றெடுத்துக் காட்டமுடியும்.

எனவே எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு அதிலிருந்து எழுச்சி பெறுவதற்கு மக்கள் இரத்தத்தை அல்ல வியர்வையை சிந்தி முன்னேற முன்வரவேண்டும்.

இன்று மக்கள் முன் வந்துள்ள தேர்தல் முறைமையானது  நீங்கள் உங்களையே தெரிவு செய்து உங்களையே ஆழும் சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது. இதை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.

இவ்வாறு முன்வரும் பட்சத்தில் அதற்கு பக்கபலமாக இருந்து தோளோடு தோள்கொடுத்து மக்களின் வாழ்க்கையை பல்மடங்காக முன்னேற்றம்காணச் செய்வதற்கு எம்மால் முடியும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறேன்.

Related posts:

வீதி திருத்த அறிவிப்புகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
வாழ்வின் இருப்பே கேள்விக்குறியாக இருந்தபோது கரங்கொடுத்து தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா - புங்...
யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் ப...