அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு 27 இலட்சம் : அநாவசிய செலவை ஏற்றுக்கொள்ள முடியாது – ஈ.பி.டி.பி!

Friday, September 6th, 2019

யாழ் மாநகரசபையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது உபசரிப்பு செலவாக 27 இலட்சம் ரூபா நிதியை யாழ் மாநகரசபை பொறுப்பேற்கவுள்ளதாக சபை முடிவு எடுக்காததை எடுத்துக்கொண்டதாக தெரிவிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

யாழ் மாநகர சபை குறித்த நிதியை செலவிடவுள்ளதாக சபைக் கூட்டத்தில் எடுக்காத தீர்மானத்தை எடுத்துக்கொண்டதாக தெரிவிப்பது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

யாழ் மாநகர சபையின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வுக்காக யாழ் மாநகரசைபை 27 இலட்சம் ரூபா நிதியை உணவு மற்றும் உபசரனைச் செலவாக மேற்கொள்ள சபை முடிவு எடுக்காத ஒன்றை எடுத்துக்கொண்டதாக தெரிவிப்பதானது முற்றிலும் மக்களின் வரிப்பணத்தை அரசியல் உள் நோக்கத்திற்காக விரயம் செய்யும் ஊழல் மோசடியான செயலாகும்.

யாழ் மாநகர சபைக்கென ஒரு நிலையான கட்டடம் அமைக்கப்பட வேண்டும் என்பது அவசியமானதும் வரவேற்கத்தக்க விடயம் தான். ஆனாலும் மாநகரசபை கட்டிடம் எந்தக் கலாச்சாரத்தை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் இதுவரை தெளிவில்லாத தன்மை காணப்படுகிறது. அது மட்டுமல்லாது குறித்த கட்டடம் தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கவில்லை என்ற சந்தேகம்; மக்களிடையே வலுவாக நிலவுகிறது. அதேபோன்று அமையவுள்ள கட்டிடம் எவ்வகை அம்சம்;களை கொண்டுள்ளது என்ற வரைபடமும் விளக்கமும் மக்களுக்கோ அன்றி சபைக்கோ பார்வைக்கு வைக்கவும் இல்லை முடிவும் எடுக்கவில்லை.

ஒரு கட்டடத்தை கட்டுமாணம் செய்வதற்காக ஒப்பந்தம் செய்த ஒப்பந்தகாரரே அதன் ஆரம்ப நிகழ்வுகளை நடத்துவது வழமை. இந்தவகையில் யாழ். மாநகரசபைக் கட்டிடத்தை கட்டுவதாக ஒப்பந்தம் செய்த ஒப்பந்தகாரர்களே அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கான செலவீனங்களுக்கு பொறுப்பானவர்காக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது மக்களின் வரிப்பணத்தில் மாநகரசபை பெருந்தொகை நிதியை செலவிட முண்டியடிப்பது பகற்கொள்ளைக்கான அங்கீகாரமாகவும் அரசில் உள் நோக்கமும் கொண்டதாகவுமே மக்கள் சந்தேகிக்கின்றனர்.

இதற்கான கட்டுமான பணிகளில்; உள்ளுரில் உள்ளவர்களே அமர்த்தப்படுவார்களா? என்ற சந்தேகமும் உள்ளது. அத்துடன் நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் உரிமத்திற்கு யார் பொறுப்பானவர்கள்? பாராமரிக்கும் பொறுப்பு யாருடையது? என்பதும் வெளிப்படுத்தப்படாமல் அரசியல் உள் நோக்கத்துடன் அவசர அவசரமாக செயற்படுத்தப்படும் நிகழ்ச்சி நிரலாவே பார்க்கப்படுகிறது.

இவ்வாறான தெளிவூட்டல்கள் இல்லாத நிலையில் இவ் அடிக்கல் நாட்டும் விழா என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பினரது சூனியமாகியுள்ள அரசியலை நிலைநிறுத்த மாநகர வாக்காளர்களை மந்தமாக்கும் செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது.
ஆனாலும் எமது மாநகரசபைக்கு தமிழர் கலாச்சார வடிவிலான நிரந்தரமான கட்டிடம் தேவையானதே.

அத்துடன் இந்திய மக்களின் உதவியுடன் யாழ் நகரின் மையத்தில் கலாசார மண்டபத்தை நாம் எவ்வாறு வெளிப்படை தன்மையாக சபையின் ஏகோபித்த முடிவுடன் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு முயற்சி எடுத்து நாம் கட்டிவித்துக் கொண்டிருக்கின்றோமோ அதே போன்று வெளிப்படை தன்மை இந்த கட்டிடத்திலும் காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அது மட்டுமல்லாது 2000 இருக்கைகள் கொண்ட பொது மண்டபமும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம்.

அந்;தவகையில் இவ்வாறான எதுவித வெளிப்படை தன்மைகளும் அற்ற நிலையில் சபையின் ஏகோபித்த முடிவு இல்லாத நிலையில் அவசர அவசரமாக தேர்தலுக்கான ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு மாநகரசபை பெருந்தொகை நிதியை செலவீனம் செய்வதை ஏற்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளது.

Related posts:

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி - டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மகிழ்ச்சி தெர...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் வவுனியா மாவட்ட மாநாடு ஆரம்பம்!
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கடலுணவு ஏற்றுமதியாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்த...

மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றோம்; - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் த...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முஸ்லிம்களுக்கான கிளை அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...