திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு உடனிருந்து உற்சாகமளித்த அமைச்சர் டக்ளஸ்!

Sunday, March 24th, 2024

திருச்செல்வத்தின் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனிருந்து உற்சாகமளித்துள்ளார்.

முன்பதாக யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

எனினும் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் 1000 மீற்றர் தூரத்திற்கு வாகனத்தை தனது தாடியாலும் முடியாலும் இழுத்து உலக சாதனையை நிகழ்த்துவதே திருச்செல்வத்தின் நோக்கமாக அமைந்தது.

அதற்கமைய 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரம் தாடியாலும், 500 மீற்றர் தூரத்தை தனது தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த உலக சாதனையை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வை Cholan Book of World Record (CBWR) நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரடியாக அவதானித்து திருச்செல்வம் அவர்களின் சாதனையை அங்கீகரித்து பதக்கத்தையும், விருதையும்,   பட்டயத்தையும் வழங்கியிருந்ததுடன் குறித்த பரிசில்களை  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம் உறுதி: அமைச்சர் டக்ளஸ் த...
தாளையடியில் அமைக்கப்படும் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தின் பணிகள் தொடர்பில் அமைச்சர்...
இலங்கை கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தி...

“எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ள முடிவுசெய்தது ஏன்? “எழுக தமிழ்” கூட்டுப்பேரணியாக அணிதிரண்டது ஏன்...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் மனிதாபிமானமே தேவைப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி...
கடும் வறட்சியான காலநிலை - நீர் ஆவியாவதை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்ப...