இலங்கை கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Monday, November 6th, 2023

இலங்கையில் உள்ள கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் மீன் இறக்குமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலின்போது கடல் உணவு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் துறையில் தற்போது பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவை ஆராயப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததுடன் வெளிநாடுகளில் இருந்து மீன் இறக்குமதி செய்வது மற்றும் தரமற்ற மீன்களை இறக்குமதி செய்து தயாரிக்கப்படும் மீன் ரின் தொழிற்சாலைகளின் செயற்பாடுகளை தடை செய்வது மற்றும் ஐஸ் கட்டிகளுக்கு நியாயமான விலையை தீர்மானிக்க வேண்டியது போன்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இராஜாங்க அமைச்சர், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

மீன்பிடியில் ஈடுபடும் இலங்கையின் பலநாள் படகுகள்  தமது படகில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளின் செயற்பாடுகள் மற்றும் வெளிநாடுகளின் எல்லைகளைத்  தாண்டிச் சென்று அந்நாடுகளில் கைதாவதும் அதிகரித்து வருவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த , அமைச்சின் செயலாளர்கள், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதேவேளை 

கடற்றொழில் அமைச்சு விரைவில் நிறைவேற்றவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பாக பல தரப்புகளிடமிருந்தும் முன்வைக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் திருத்தங்கள் குறித்து அமைச்சின் செயலாளருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடற்றொழிலாளர்களுக்கு காப்புறுதியும் கடற்றொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஏற்படுத்தப்படும் - வ...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் ...
அதிகபட்சம் 20 ரூபாய் அதிமாக மாத்திரமே விற்பனை செய்ய முடியும் - எரிபொருள் விற்பனை தொடர்பில் மேற்பார்வ...