கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, November 26th, 2020



பூரணப்படுத்தப்படாத வீடுகளுக்கான நிதியைப் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த  அரசாங்கத்தினால் தேர்தல் கால அரசியல் சுயநலன்களுக்காக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு அவற்றை பூர்த்தி செய்வதற்கு போதுமான நிதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

இதன் காரணமாக தற்போது பெய்து வரும் பெருமழை காரணமாக குறித்த வீட்டுத் திட்டத்தினை பெற்றுக் கொண்ட மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலேயே பாதிக்கப்பட்ட மக்களினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தெரிவிக்கையில் –

தற்போது பருவகால மழை உச்சம்பெற்றுள்ளது. இந்நிலையில் நாம் இந்த வீட்டுத் திட்டங்களை நம்பி ஏற்கனவே இருந்த கொட்டகை வீடுகளையும் இழந்துவிட்டோம். தற்போது அரைகுறையாக கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளை பூரணப்படுத்தவதற்கான மிகுதி பணம் எமக்கு வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது.

அன்றைய ஆட்சியாளர்கள் எமக்கு ஒதுக்கிய இந்த வீட்டுத் திட்டத்தின் முழுமையான நிதியும் துறைசார் திணைக்களத்தினது வங்கிக் கணக்கிற்கு சென்றபின்னரே ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.  ஆனால் தற்போது அதிகாரிகள் அவர்கள் அவ்வாறு ஒதுக்கவில்லை என்று கைவிரித்துவிட்டனர்.

இதனால் நாம் வீடுகளை முழுமையாக்க முடியாது கூரைகள் அற்றதும் சுவர்கள் முழுமையாகாத விடுகளில் சிறுவர்களுடன் பெரும் பாதிப்பகளுடன் வாழவேண்டியுள்ளது. அத்துடன் சில தினங்களாக பெய்துவரும் கனமழை மற்றும் அதிகரித்த காற்றின் காரணமாக இருந்த தரப்பாள் வீடுகளும் தூக்கி வீசப்பட்டுவிட்டன.

எனவே எமது நிலைமையை கருத்திற்கொண்டு கடந்த அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமக்கு தீர்வினை பெற்றுத்தாருங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில் – வீடியோ

இந்நிலையில் பருத்தித்துறை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச பொறுப்பார்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களது அவலங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Related posts:


மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள்  அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது! செயலாளர் நாய...
திட்டங்களுக்கு சிங்களப் பெயர்கள் சிறுபான்மை மக்களுக்கு பயனில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா த...
வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உற...