கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்னான அனுமதி தொடர்பில் இரு தினங்களில் தெரியவரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!

Sunday, February 20th, 2022

கச்சதீவு திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதியுடன் கதைத்து முடிவை அறிவிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்பதாக யாழ்ப்பாணம் – பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

நேற்றுமாலை இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: