எமது பூர்வீக இருப்பிடங்களை பாதுகாத்து தாருங்கள் : டக்ளஸ் எம்.பி.யிடம் பாதிக்கப்பட்ட குருநகர் பகுதி மக்கள் கோரிக்கை!

Friday, October 18th, 2019

யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் வடிகால் புனரமைப்பால் நடவடிக்கை மூலம்  நான்கு தசாப்தங்களாக தமது வாழிடங்களை அமைத்து வாழும் பல குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் அந்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தி அதற்கான மாற்று வழியை மேற்கொண்டு தமக்கு தீர்வு தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பாதிக்கப்பட்ட குருநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் யழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித் குறித்த செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில்  தெரியப்படுத்தினர். இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக குறித்த பகுதியில் தாம் வாழ்ந்து வருகின்றோம். வடியாலுக்க மேலாக பலர் நிரந்தர வீடுகளை அமைத்தும் உள்ளனர். அதுமட்டுமல்லாது குறித்த இருப்பிடங்களுக்கு செல்லும்  வீதிகளும் இப்பகுதியில் அமைக்கப்பட்டன.

ஆனால் தற்போது மாநகர சபையின் செயற்பாட்டால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் பலர் தமது இருப்பிடங்களையும் வீதிகளையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாம் எமது உழைப்பினூடாக சிறுகச் சிறுக சேகரித்து கட்டிய இருப்பிடங்களை  உடைப்பதற்கான உத்தரவும் தற்போது அனுப்பப்பட்டள்து.

எனவே எமது நிலைமையை கருத்தில் கொண்டு குறித்த பிரச்சினைக்கு மாற்றுவழியை ஏற்படுத்தி தருமாறு  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிகைவிடுத்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறைக்கென   தனியான ஒரு  பீடம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்...
மத அடையாளங்களை பிற மதம் சார்ந்த மக்களிடம் திணிப்பதை தவிர்ப்பதே ஆரோக்கியமானது – டக்ளஸ் எம்.பி. தெரிவி...
தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து உடப்பு தமிழ் பிரதேச சபையை உருவாக்க நடவடிக்கை எடு...