மக்களை மறந்த தலைமைகளு க்கு பாடம்புகட்ட இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் – பட்டதாரிகள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா

Monday, July 24th, 2017

வேலையற்ற பட்டதாரிகளான இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக்காக போராட்டங்களை நடத்தும் அதேவேளை சுயதொழில் முயற்சிக்கான வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சுயதொழில் முயற்சியாளர்களுக்கு முதலீட்டு உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. கிடைக்கப்பெறும் அரசியல் அதிகாரங்களைக் கொண்டு எமது இளைஞர், யுவதிகளின் வேலைவாய்பபுப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க அக்கறைகொள்ளாத அரசியல் தலைமைகளுக்கு, இளைஞர், யுவதிகள் சிறந்த பாடத்தை எதிர்வரும் காலத்தில் கற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சங்கப் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போதே செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார். படித்துவிட்டு வேலையற்று இருக்கும் தமக்கு பொருத்தமான தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தந்து உதவ வேண்டும் என்று கூறிய சங்கப் பிரதிநிதிகள், தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர்.
மகஜரைப் பெற்றுக்கொண்டு உரையாற்றி செயலாளர் நாயகம் அவர்கள், திருகோணமலைக்கு நான் வந்திருந்தபோது அங்கு மக்கள் என்னிடம் முன்வைத்த கோரிக்கைகள்; நியாயமானதும், தீர்க்கக்கூடியதும், தீர்க்க வேண்டியதுமாகும். அவ்வாறு இலகுவாகத் தீர்வுகானக்கூடிய பிரச்சினைகளை செவிமடுக்கவும்,தீர்க்கவும் அரசியல் தலைமை இல்லாதவர்களாக திருமலையில் வாழும் தமிழ்மக்கள் இருக்கின்றார்கள்.
துரதி~;டவசமாக திருகோணமலையிலும் பொய் வாக்குறுதிகள் வழங்கி தமிழ்மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள். அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் இணக்க அரசியலில் காலத்தை வீண் விரையம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.
நான் தற்போதைய அரசாங்கத்தில் பங்காளியாக இல்லாதபோதும்,எனக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் மட்டுமல்லாது அமைச்சர்களுடனும் தொடர்புகள் இருக்கின்றது. அந்த அணுகுமுறையின் ஊடாக மக்கள் என்னிடம் முன் வைக்கும் கோரிக்கைகளை தீர்த்துவைக்க முயற்சிக்கின்றேன். அதுபோல் உங்களுக்கான வேலைவாய்ப்புக்கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வுகான முடியாவிட்டாலும் என்னால் இயன்றவரை முயற்சிசெய்வேன்.
அதேவேளை எமது இளைய தலைமுறையினர் வேலை வாய்ப்பொன்று கிடைக்கும்வரை சுயதொழில் முயற்சிகளிலும் அக்கறை எடுக்கவேண்டும். அதற்கான நல்ல திட்டங்களை வகுத்து முன்வருவீர்களானால் அதற்கான உதவியையும் பெற்றுத் தருவதற்கு முடியும்.
திருகோணமலையிலிருந்து நாடாளுமன்றத்திற்கும், மாகாணசபைக்கும் தமிழ்மக்களின் வாக்குகளால் போனவர்கள் மக்களை மறந்து செயற்படுகின்றனர். எதிர்காலத்தில் இதுமாதிரியான தவறுகளுக்கு இடமளிக்காதவகையில் இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும். நாற்பது வருடங்களாக திருமலை மக்கள் அரசியல் ரீதியாக பாரிய பின்னடைவைக் கண்டுவருகின்றார்கள். இந்த நிலைமையை மாற்றியமைக்க இளைஞர், யுவதிகள் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சிவகுமார், செயலாளர் பிரகலாதன், பொருளாளர் சசிகாந்தன் ஆகியோரும், கட்சியின் திருமலை மாவட்ட நிர்வாகச் செயலாளர் வைத்தியர் விக்கினராஜா, கட்சியின் திருமலை மாவட்ட தம்பலகமம் பிரதேச நிர்வாகச் செயலாளர் குமாரகுலதாஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts:


மக்களது பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே திருமலைக்கான விஜயத்தின் நோக்கம் – டக்ளஸ் ...
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!