தடுப்பூசி தொடர்பில் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வு – நடவடிக்கை மேள்கொள்ளுமாறு வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Thursday, January 13th, 2022

கொரோனா தடுப்பூசிகளை போடுதல் மற்றும் டெங்குப் பரவலை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூடடத்தில் குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, சிலவகையான கொறோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதால் மலட்டுத் தன்மை ஏற்படும் என்ற தவறான கருத்து சமூகத்தில் பரவி இருப்பதனால் பாடசாலை மாணவிகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிப்பதாக  சுட்டிக்கட்டிய கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், தடுப்பூசிகள் அனைத்தும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை என்பதால் பொதுமக்கள் எந்தவிதமான  தயக்கமும் இன்றி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, டெங்கு நோய் பரவுவதற்கான  ஏதுநிலைகள் காணப்படுவதுடன் இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 39 டெங்கு நோயாளர்கள் அண்மைக் காலத்தில் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்த பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், மக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொரோனா தடுப்பூசிகளை முடிந்தளவு விரைவில்  அனைவருக்கும் கிடைப்பதை உறுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததுடன், பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேள்கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மக்களின் தேவைகளையும் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் முதன்மைப்படுத்தி வனப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் கணிசமானவற்றை எதிர்வரும் ஆறு மாத காலத்தில் விடுவித்துக் கொள்ள முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: