வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலங்களுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை வழங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, August 9th, 2021
வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத் தலங்களான கீரிமலை நகுலேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் ஆகியற்றுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய, பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்குறித்த இரண்டு ஆலயங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கான தனது பிரதிநிதி என்று அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சீனத் தூதுவருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பிரதமரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் வழங்கி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதமருடன் அமைச்...
இலங்கை தமிழர் நலனில் தி.மு.க. இன் கரிசனை தொடரும் - அமைச்சர் டக்ளஸிடம் தமிழக மீன்பிடித் துறை அமைச்சர்...
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!
|
|
|
அனைத்து அரசியல் தளங்களிலும் கட்சியைநிலை நிறுத்த அனைவரும் திடசங்கற்பம் பூணவேண்டும் - செயலாளர் நாயகம் ...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...
வடக்கின் போக்குவரத்து துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்க...


