அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கேள்வி!

Thursday, September 22nd, 2016

2014ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த யோசனைகளுக்கு அமைவாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை, டெல்சித் தோட்டம், லேன்ஸ்கேப் பிரிவிலும், தெனியாய பகுதியிலும் 2014ம் ஆண்டு அக்டோம்பர் மாதம் 23ம் திகதி வெகு கோலாகலமாக அன்றைய பெருந்தோட்டத்துறை அமைச்சரும் இன்றைய தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சருமாகிய கௌரவ மகிந்த சமரசிங்ஹ அவர்களால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டபோதும், அத் திட்டத்திற்கு அமைய இதுவரை அம்மக்களுக்கு எவ்வித வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிய வருகிறது. என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களிடம் நேற்றைய தினம்  (21.09.2016) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உரையாற்றினார்.

மேலும் தனது உரையில், ஒரு வீடு 12 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்படும் எனக் கூறப்பட்டு, அன்றைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகவும், இத் திட்டப் பிரகாரம் களுத்துறை மாவட்டத்தில் மொகமதியா தோட்டம், அ~;க்வெலி தோட்டம், ஹெடிகல்ல தோட்டம் போன்ற தோட்டங்களிலும் இத் திட்டத்தின் கீழான வீடுகள் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பகுதி தோட்ட மக்கள் நீண்ட காலமாகவே திருத்தங்கள் ஏதும் மேற்கொள்ளப்படாத மிகவும் பழைமை வாய்ந்த லயன் அறைகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், தங்களது குடியிருப்புகள் எப்போதும் உடைந்து விழலாம் என்ற அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். எனவே இம் மக்களது வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பிலும் நாம் முக்கிய அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.

மேற்படி 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தற்போது தங்களது அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றதா?

முன்னெடுக்கப்படுவதாயின் மேற்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு இத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுமா?

இத் திட்டம் முன்னெடுக்கப்படாவிட்டால், மேற்படி தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் தங்களது அமைச்சு ஏதேனும் திட்டங்களைக் கொண்டுள்ளதா? என்று கேள்விகளை முன்வைத்த செயலாளர் நாயகம் அவர்கள்,  மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.

Untitled-1 copy

Related posts:

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள் - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ...
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கடலுணவு ஏற்றுமதியாளர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்த...
மக்களை தூண்டி விட்டுவிட்டு ஔிந்து கொள்ள மாட்டேன்" - புதுக்குடியிருப்பு மண்ணில் அமைச்சர் டக்ளஸ் ...

பதவிகள் கௌரவத்திற்கு உரியவை அல்ல, அவை மக்களின் நலன்சார்ந்தவை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள் - அனுதாப...
ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்த...
நக்டா நிறுவனத்தின் தலைமையகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - செயற்பாடுகளின் விஸ்தரிப்பு தொடர்ப...