2018 ஆம் ஆண்டு முதல் சவுதியில் சினிமா!

Wednesday, December 13th, 2017

சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அடுத்த வருடம் முதல் சவுதி அரேபியாவில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றன. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.

ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குடிமக்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அடுத்த வருடம் முதல் விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அடுத்த ஆண்டு முதல் நாட்டில் சினிமாவுக்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள இந்த நிலையில், சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது.

Related posts: