இஸ்தான்புல்லில் தாக்குதலில் 39 பேர் பலி: தாக்குதல்தாரியை தேடிவரும் போலிஸார்!

Monday, January 2nd, 2017

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்தான்புல்லில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை துருக்கி போலிஸார் தேடி வருகின்றனர். அதில் கொல்லப்பட்ட 39 பேரில் சிலருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று முடிந்துள்ளன..

சவுதியைச் சேர்ந்த ஐவர் உட்பட உயிரிழந்தவர்களில் பலர், அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று துருக்கி ஊடகம் தெரிவித்துள்ளது.

குர்திய தீவிரவாத அமைப்பான பிகேகேவின் தலைவர் இந்த தாக்குதலில் குர்திய படைகள் ஈடுபடவில்லை என மறுத்துள்ளார்.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது; இந்த தாக்குதல் கொடிய மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என தெரிவித்துள்ளது.

இதை விட ஒரு இழிவான குற்றத்தை நினைத்து பார்பது கடினம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது ஒரு கொடூரமான செயல் என அமெரிக்கா கண்டித்துள்ளது.

பயங்கரவாதத்தின் விளைவுகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று போப்  பிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

_93203254_gettyimages-630761030

Related posts: