முதல் முறையாக சோமாலியா நடத்தும் ஆப்பிரிக்க தலைவர்களின் மாநாடு!

Wednesday, September 14th, 2016

கடந்த மூன்று தசாப்தங்களில் முதல் முறையாக சோமாலிய அரசு ஆப்பிரிக்கத் தலைவர்களின் பிராந்திய உச்சிமாநாட்டை நடத்தவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள கென்யா, எத்தியோப்பியா, உகண்டா நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவிற்கு வந்துள்ளனர். அவர்கள் சோமாலியா மற்றும் தெற்கு சூடான் நாடுகளில் பாதுகாப்பு குறித்து விவாதிக்கவுள்ளனர்.

சோமாலியாவின் வெளியுறவு துறை அமைச்சர் பேசுகையில், இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம், சோமாலியா தான் ஒரு தோல்வியடைந்த தேசம் அல்ல என்று எடுத்துக்காட்டவுள்ளது என்று கூறினார்.

இந்த மாநாட்டிற்கு வரும் தலைவர்களின் கூட்டத்திற்கு பல நாட்கள் முன்பாகவே, மொகாதிஷு நகரத்தின் பெரும்பாலான இடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.இது அங்கு இயல்பு வாழ்க்கையை தீவிரமாக பாதித்துள்ளது. மற்றும் இஸ்லாமியர்களின் திருவிழாவான பக்ரீத் கொண்டாட்டங்களை பாதித்துள்ளது.

_91181964_somalia

Related posts: