அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க விதித்த தடை நீக்கம்!

Friday, February 2nd, 2018

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகம் கடந்த வருடம் அக்டோபர் மாதம்  அமெரிக்காவின் அகதிகள் கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. அதில்ஆபத்தான நாடுகள் என்று 11 நாடுகளைக் கண்டறிந்து அங்கிருந்து அகதிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நாடுகள் எவை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அவை ஈரான், ஈராக், எகிப்து, லிபியா, மாலி, வடகொரியா, சோமாலியா,சூடான், தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் என அறியப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்க அரசு 11 நாடுகளில் இருந்தும் அகதிகள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த  நாடுகளில்இருந்து அமெரிக்கா வர விரும்புவர்கள் மிக அதிகமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: