உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் – சர்வதேச நாணய நிதியம் தகவல்!

Thursday, May 4th, 2023

நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

இது குறித்து பிராந்திய பொருளாதார கண்ணோட்டம்-ஆசியா மற்றும் பசிபிக் தொடர்பான சர்வதேச நாணய நிதியம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

2022 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 3.8% ஆக இருந்தது. இது நடப்பாண்டில் 4.6% ஆக அதிகரிக்கும்.

இந்த வளர்ச்சி பெரும்பாலும், இந்தியா மற்றும் சீனாவால் ஏற்படும். சர்வதேச வளர்ச்சியில் இப்பிராந்தியத்தின் பங்கு 70% ஆக இருக்கும்.

ஆசிய பிராந்தியத்தில் வளர்ந்து வரும் இருபெரும் சந்தைப் பொருளாதாரமாக இந்தியா மற்றும் சீனா உள்ளன.

நடப்பு ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 50% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: