ஒரு கட்சியின் ஆணிவேராக இருப்பது வட்டார செயற்குழுக்களே – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிரவாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Tuesday, February 14th, 2017

ஒரு கட்சியின் ஆணிவேராக இருப்பது கட்சியின் அடிமட்ட நிர்வாக உறுப்பினர்களும் அவர்களது வெளிப்படையான செயற்பாடுகளும்தான். இவையே ஒரு கட்சி ஓங்கி வளர்வதற்கு அத்திவாரமாக அமைகின்றது. எனவே வட்டாரக் குழுக்கள் வலுவாக இருக்கும் பொழுது அக்கட்சி விருட்சம் பெறுகின்றது  என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற நல்லூர் பிரதேசத்தின் வட்டார  செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

ஒரு கிராமத்தின் தேவைகள் குறைபாடுகளை கட்சியை நோக்கி எடுத்துச் செல்வதும் கட்சியினுடைய அரசியல்  கருத்துக்களை மக்கள் நோக்கி எடுத்தச் செல்வதும் வட்டாரக் குழுக்களின் முக்கிய கடமைகளாகும். இதனூடாகவே ஒரு கட்சியை மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையிலும் கட்சியின் கருத்துக்களுக்கு மக்கள் அணிதிரளக்கூடிய வகையிலும் உருவாக்கிக்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.

கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா.வேலும்மயிலும் குகேந்திரன்,மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்),  கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் உடனிருந்தனர்.

 

05

0608

Related posts: