இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை – வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022

ஈழ தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து இந்தியா எந்தவிதமான அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஸ்ட்ரேட்நியூஸ் க்ளோபல் இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களது பிரச்சினைகள் என்பது, உள்ளார்ந்த குறைபாடுகளால் எழுந்தவை. அவை அவதானத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த பிரச்சினைகளின் ஆரம்ப புள்ளிகள் தொடர்பாக இன்னும் அவதானம் செலுத்தப்படவில்லை. எனினும் இவை தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் தற்போதும் பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டவை இல்லை என குறிப்பிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அது தற்போது முழுவிவகாரங்களையும் உள்ளடக்கியது என தெரிவித்துள்ளார்.

பலதுறைகளில் ஏற்படக்கூடிய இணைப்பே எதிர்காலத்திற்கான எதிர்காலத்திற்கான திறவுகோல் என தெரிவித்துள்ள அமைச்சர் உடல்ரீதியான இணைப்பு மாத்திரமல்ல என தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் மின் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டால் அது இலங்கைக்கு பெரும் நன்மையளிப்பதாக அமையும் என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கொழும்புதுறைமுகத்தின் மேற்குகொள்கலன் முனையத்தை அகழும் பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெருந்தொற்றின்போது சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியும் மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களின் வருமானம் வருவது நின்றுபோனமையும் காரணம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம்’ நாங்கள் சீனாவுடனான உறவுகளை முக்கியமாக கருதுகின்றோம் ஆனால் அதற்காக நிச்சயமாக இந்தியாவை விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: