தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் சேவையில் முழுமைக பங்களிக்க வேண்டும் – பிரதி பொலிஸ்மா அதிபர்’ அஜித் ரோஹண!

Friday, April 23rd, 2021

சுதந்திரமான ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தினையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ள பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமாகிய அஜித் ரோஹண, தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிணைய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் வடமாகாண பொலிஸ் நிலையத்தின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் வடமாகாணத்தினை பிரதித்துவபடுத்தும் கல்வி நிலை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தார்கள், இளைஞர், யுவதிகளை பிரதேச செயலகங்கள் ரீதியாக வலுவூட்டும் உத்தியோகத்தார்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கான செயலமர்வு யாழ் யூ.எஸ்.ஹோட்டலில் நடைபெற்றது .

குறித்த செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே பிரதி பொலிஸ்மா அதிபரும் ஊடக பேச்சாளருமாகிய அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

கடந்த சில ஆண்டுகளின் 10 ஆயிரம் இளைஞர்கள், யுவதிகளை பொலிஸில் இணைத்துக் கொண்டோம். அதனை தொடர்ந்து எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 24 ஆயிரம் நபர்களை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் வடமாகாணத்தில் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை எழுத்து மூலமாகவோ, வாய் மொழி மூலமாகவோ கொண்டு வருகின்ற போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்வாறான மொழிப் பிரயோகங்களில் தவறு விடுகின்றனர்.

எனவே அவ்வாறான எண்ண நிலைப்பாட்டினை தமிழ் இளைஞர், யுவதிகள் கைகோர்க்கும் போது மாற்ற முடியும். அதுவே இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் கடமையும் ஆகும் என்றுமு; தெரிவித்துள்ளார்.

இதற்கான ஒத்துழைப்பினை வழங்க வடமாகாணத்தினை பிரதித்துவபடுத்தும் கல்வி நிலை சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தார்கள், இளைஞர், யுவதிகளை பிரதேச செயலகங்கள் ரீதியாக வலுவூட்டும் உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்வந்து இதனை கிராம சேவையாளர்கள் ரீதியாக சென்று விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

Related posts: