பயணத்தடை இல்லை – உலக சுகாதார ஸ்தாபனம்!

Saturday, July 22nd, 2017

இலங்கையில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதியுச்சமாகக் காணப்படுகின்ற போதிலும், வெளிநாட்டவர்களுக்கு பயணத்தடையையோ, வர்த்தகத்தடையையோ பரிந்துரை செய்யவில்லை” என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில், உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2010ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான ஆறுவருட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், டெங்கு காய்ச்சலினால் இவ்வாண்டு பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4.3 மடங்கு அதிகரிப்பாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டோரில், 43 சதவீதமானோர், மேல் மாகாணத்திலேயே உள்ளனர்.

சுகாதார மேம்பாடுகளுக்காக, இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து, உலக சுகாதார ஸ்தாபனம் பல்வேறான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இலங்கையில், சுகாதார மேம்பாட்டுக்கு, தெற்காசிய பிராந்தியத்துக்கான அலுவலகப் பிரதிநிதிகள் தேவையான ஆலோசனைகளையும் வழங்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts: