கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் O/L பரீட்சைகள் வேறு நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, December 8th, 2021

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அழகியல் பாடங்களில் தங்களின் செயல்முறைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் தற்போது கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறு வசதியான நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு செய்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இப்போது தனிமைப்படுத்தலில் இருப்பவர்களும் மேற்படி நடைமுறையைப் பின்பற்றலாம். இவ்வாறான கோரிக்கைகளை பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது அதிபர்கள் ஊடாக மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக்கொள்ள தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த செயல்முறைப் பரீட்சைகள் நாடு தழுவிய ரீதியில் பரீட்சைகள் திணைக்களத்தால் டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பித்து 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

மேலதிக விபரங்களை 0112 784208 மற்றும் 0112 784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


யாழ். பல்கலைக்கழகக்  கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்...
எரிபொருள் விலையை குறைக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நிதியமைச்சர் பசில் ரா...
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு - ல...