12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!
Tuesday, April 4th, 2023
12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை 3 ஆயிரத்து 738 ரூபாவாகும்.
அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 402 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
இதன்படி அதன் புதிய விலை ஆயிரத்து 502 ரூபா என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுதவிர 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 183 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் - ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்ததை எச்சரிக்கும் கனிய வள கூட்டுத்...
வடக்கில் சீரமைக்கப்படவுள்ள சுகாதாரக் கட்டமைப்புக்கள்!
நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடற்கரையோரப் பிரதேசங்களில் முதலீடு செ...
|
|
|


