நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடற்கரையோரப் பிரதேசங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு – இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு நகரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநடுவே கைவிடப்பட்டுள்ள முதலீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான இறுதி அறிவித்தல், முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்திட்டங்களை மீள ஆரம்பிக்க முதலீட்டாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை அரசாங்கம் மீளப்பொறுப்பேற்று, அத்திட்டங்களை நிறைவு செய்வதற்காக புதிய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: