ஊரடங்கு நடைமுறை – நாட்டில் நாளாந்தம் 15 பில்லியன் நட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டு!

Tuesday, August 24th, 2021

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால் அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற சூழ்நிலை ஏற்படும் போது, நாட்டின் வளர்ச்சி வீதம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பன பாதிக்கப்படும்.

எனவே. நாட்டை மூடுவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க வேண்டுமாயின், நாம் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜ...
நாடாளுமன்றத்தினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்த பொதுநலவாய ...
மாணவர்களின் மீது சுமையை அதிகரிக்காது சட்டத்தைப் பயிற்சிசெய்யும் சட்டத்தரணிகளிடமிருந்து உறுப்புரிமைக்...