இன்னும் மூன்று மாதங்களுக்கு தேங்காயின் விலை குறையாது – தெங்கு அபிவிருத்தி அதிகார சபை!
Sunday, February 12th, 2017
தற்போது சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 60 முதல் 70 மற்றும் 80 ரூபா அளவில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த போகத்தில் தெங்கு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவே, தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின், தலைவர் கபில யகன்தாவலகே தெரிவித்துள்ளார். வீட்டு நுகர்வுக்காக பயன்படுத்தப்படும் தேங்காயில், நூற்றுக்கு 40 சதவீத தேங்காய் கழிவுப்பொருளாக வீசப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
வடக்கில் 4 பூங்காக்களை புதிதாக அமைக்க நடவடிக்கை!
டிக்ஓயா ஆதார வைத்தியசாலை இன்று மக்களிடம் கையளிப்பு!
ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிகவும் பழமை வாய்ந்த 40 கொடிகள் திருட்டு - 100 சந்தேக நபர்கள் அடையாளம் - மூ...
|
|
|


