வடக்கில் 4 பூங்காக்களை புதிதாக அமைக்க நடவடிக்கை!

Friday, October 14th, 2016

வடமாகாணத்தில் புதிதாக 4 பூங்காக்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் டபிள்யு.எஸ்.கே. பத்திரண தெரிவித்துள்ளார்.

இப் பூங்காக்களை அமைப்பதற்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஈகிய மாவட்டங்களில் காணிகளை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் 22 தேசிய பூங்காக்கள் இருக்கின்றன். அத்துடன் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த 4 பூங்காக்களுடன் மொத்தமாக 26 பூங்காக்களை முன்னெடுத்து செல்வதற்கு தற்போதுள்ள 900 ஊழியர்கள் எண்ணிக்கை போதுமானதாகயில்லை. எனவே மேலும் 1500 ஊழியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரத்தை எதிர்பார்த்திருப்பதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

7cf640afe9c5ad9e13cbb68a2284ed32_L

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் மாதர் அமைப்புகளை ஊருவாக்குவிப்பது தொடர்பான வேலைத்திட்...
சந்திரகுமாரின் வெளியேற்றத்தின் பின்னரே வன்னியில் எமது கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது – ஈ....
சலுகை அடிப்படையில் இலங்கையின் எரிபொருள் தேவையை நிறைவு செய்ய ஐக்கிய அரபு இராச்சியத்துடன் அமைச்சர் பீர...