மின் உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை! 

Monday, March 5th, 2018

நாட்டில் 2025ஆம் ஆண்டளவில் 600 மெகா வொட் மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடிய காற்று மின்வலு உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர்ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மின்வலு உற்பத்தி தொகுதிக்கு புதுப்பிக்கக்கூடிய மின்வலு தோற்றுவாய்களைக் கூடுதலாக அறிமுகப்படுத்தப் போவதாகவும் மன்னாரில் 375 மெகாவோட் மின்வலு உற்பத்தி நிலையமும் பூநகரியில் 170 மெகாவோட் மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடிய காற்று மின்வலு பூங்காவும் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சுன்னாகத்தில் 10 மெகாவொட் மின்வலுவை உற்பத்தி செய்யக்கூடிய இரு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: