Whatsapp பயன்படுத்த சீனாவில் தடை!

Friday, September 29th, 2017

Whatsapp செயலி பயன்படுத்த சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றே சீனாவில் Whatsapp இற்கும் முழுமையாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கிரேட் ஃபயர்வால் மூலம் சைபர் துறை சார்ந்த நடவடிக்கைகளை அவதானித்து வரும் சீன அதிகாரிகளுக்கு Whatsapp இடையூறை ஏற்படுத்தியதைத் அடுத்து குறித்த செயலிக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் சர்வதேச சிம் கார்டுகளை பயன்படுத்தும் Whatsapp பயனர்கள் எவ்வித இடையூறையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 2009-ம் ஆண்டு முதல் பேஸ்புக் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: