இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

Thursday, January 24th, 2019

இந்தோனேசியாவின் சுலவேசிய மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சுலவேசி மாகாணத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றி முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணி நடைபெறுகிறது. நிலச்சரிவினால் இப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: