யாரையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவில்லை: இம்ரான்கான் கட்சி அதிரடி!

Friday, August 3rd, 2018

பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை. இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்

மேலும், பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14-ஆம் தேதிக்குள் பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான முயற்சிகளில் இம்ரானின் கட்சி தீவிரமாக உள்ளது. இதனிடையே, அந்தப் பதவியேற்பு விழாவில்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திடம் பிடிபி கட்சி ஆலோசனை கேட்டிருப்பதாகக் கூறப்பட்டது.  ஆனால், திடீர் திருப்பமாக, பதவியேற்பு விழாவுக்கு எந்த ஒரு வெளிநாட்டு தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்படாது என்று இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்தது.

அதேபோல், இம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பதால் கிரிக்கெட் பிரபலங்களையும், சினிமா பிரபலங்களையும் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும்,  அதன்படி இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. அரசியல் பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவு, இம்ரான்கான் அழைப்பை ஏற்பதாக நேற்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பிடிஐ கட்சியின் செய்தி தொடர்பாளர், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என யாருக்கும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Related posts: