புதிய சாதனையில் இணைந்த ஆப்கானிஸ்தானின் ரஷீத்கான்!

Wednesday, June 6th, 2018

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம்இ குறைந்த டி20 போட்டியில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2வது வீரர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் படைத்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிராக நேற்று நடந்த டி20 போட்டியில்இ 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத்கான் 13 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன்மூலம் டி20 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை அவர் கடந்தார். ரஷித்கான் இந்தப் போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றியபோதுஇ குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ரஷீத்கான் 31 போட்டிகளில் 52 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிரும் தனது 31வது போட்டியில் 50வது விக்கெட்டை வீழ்த்தியதால்இ ரஷீத்கான் அவருடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இலங்கை வீரர் அஜந்தா மெண்டீஸ் 26 ஆட்டத்தில் 50 விக்கெட்டுகள் வீழ்த்தியதால்இ அவர் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

Related posts: