உலகக்கிண்ண கால்பந்தாட்டம் – பெனல்டியில் வென்ற குரோஷியா கால் இறுதிக்குத் தகுதி!

Tuesday, December 6th, 2022

கத்தார் 2022 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிக்கு குரோஷியா  தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற 16 அணிகள் சுற்றின் போட்டியொன்றில் ஜப்பானிய அணியை பெனல்டி முறையில் 3:1 கோல்கள் விகிதத்தில் குரோஷியா வென்றது. கத்தாரின் அல்-வக்ராஹ் நகரிலுள்ள அல் ஜானோப் அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.

போட்டியின் 43ஆவது நிமிடத்தில் ஜப்பானிய வீரர் டைசன் மயீடா கோல் புகுத்தினார். இடைவேளையின்போது ஜப்பானிய அணி 1:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.

அதன்பின் 55 வேது நிமிடத்தில் குரோஷியாவின் ஐவன் பேரிசிக் புகுத்திய கோல் கோல் விகிதத்தை 1:1 என சமப்படு;த்தியது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரம் முடிந்து, மேலதிக உபாதை ஈடு நேரத்தின் முடிவிலும் இரு அணிகளும் 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் இருந்தன. இது இச்சுற்றுப்போட்டியில் முதல் தடவையாக மேலதிக நேர ஆட்டத்துக்கு வழிவகுத்தது.

ஆனால், 30 நிமிட மேலதிக நேர ஆட்டத்தில் கோல் எதுவும் புகுத்தப்படாததால் ஆட்டம் 1:1 கோல் விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்தது.

அதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்ககப்பட்டன. இதில் 3:1  அணி கோல் விகிதத்தில் வெற்றிபெற்று கால் இறுதிக்கு தகுதிபெற்றது.

குரோஷிய கோல் காப்பாளர் டொமினிக் லிவாகோவிச் சிறப்பாக செயற்பட்டு, ஜப்பானின் 3 பெனால்டிகளைத் தடுத்தார்.

குரோஷிய வீரர்களான நிகாலோ விலாசிக், மார்செலோ ப்ரோசோவிக், மரியோ பசாவிக் ஆகியோர் பெனல்டி வாய்ப்புகளைப் பயன்படுத்தி கோல்களைப் புகுத்தினர். ஜப்பானிய வீரர்களில் டகுமா அசானோ மாத்திரம் கோல் புகுத்தினார்

000

Related posts: