சந்திக ஹதுருசிங்கவின் சம்பளம் தொடர்பில் முரண்பட்ட தகவல்!

Monday, November 13th, 2017

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பயிற்சியாளராக சந்திக ஹதுருசிங்கவை நியமிக்கவும், அவருக்கு மாதாந்த சம்பளமாக 38 அல்லது 39 இலட்சத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வமற்ற தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தாம் இந்த விடயம் குறித்து சந்திக ஹதுருசிங்கவிடம் கலந்துரையாடியதாகவும், எனினும், அவரது சம்பளம் குறித்து தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்திக ஹதுருசிங்க தவிர்த்து வேறு மூவரிடமும் இது குறித்து கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: