மெக்ஸ்வெல் ருத்ரதாண்டவம்: சாதனையை பறிகொடுத்து படுதோல்வி அடைந்த சிங்கங்கள்!

Wednesday, September 7th, 2016

வோர்னர் 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தாலும் தனித்து நின்று ருதரதாண்டவமாடிய மெக்ஸ்வெல் 9 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கலாக 49 பந்துகளில் சதமடித்து இலங்கையின் பந்து வீச்சாளர்களை திணறடித்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்படட 20 ஓவர்கள் நிறைவில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 263 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது. 2007ஆம் ஆண்டு கென்யா அணிக்கெதிராக இலங்கை அணி பெற்றுக்கொண்ட 6 விக்கெட் இழப்புக்கு 260 என்பதே இதுவரையான T20 உலக சாதனையாக இருந்த நிலையில், இன்று அந்த உலக சாதனையை அவுஸ்திரேலிய அணி தகர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு 264 எனும் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

Australia's Glenn Maxwell celebrates scoring a century against Sri Lanka during their first twenty20 cricket match in Pallekele, Sri Lanka, Tuesday, Sept. 6, 2016. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி உலக சாதனையுடன் வெற்றி பெற்றுள்ளது.கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, அவுஸ்திரேலியா அணி 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின் சார்பில் அணித்தலைவர் வோர்னர் மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் புகுந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக சதமடித்த மெக்ஸ்வெல் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை அணி இந்தாண்டில் பங்கெடுத்துள்ள 15 T20 போட்டிகளில் கண்ட 12 வது தோல்வி இதுவாகும்.

Sri Lanka's Dhananjaya de Silva (C) dives as he attempts to field a ball hit by Australia's Glenn Maxwell during the first T20 international cricket match between Sri Lanka and Australia at the Pallekele International Cricket Stadium in Pallekele on September 6, 2016.  / AFP / LAKRUWAN WANNIARACHCHI        (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

கடந்த வாரம் இலங்கை வசமிருந்த ஒருநாள் போட்டிக்கான அதிக ஓட்டங்கள் எனும் உலக சாதனையை இங்கிலாந்து முறியடித்த நிலையில், T20 போட்டிக்கான உலக சாதனையும் இலங்கை வசமிருந்து கைநழுவியுள்ளது. டெஸ்ட், ஒருநாள், T20 போட்டிகளில் அதிகப்படியான ஓட்டக் குவிப்பு எனும் சாதனை இலங்கை வசமே இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டிக்குப் பின்னர் இரு அணிகளும் சந்தித்துள்ள மொத்தமான 9 T20 போட்டிகளில் 6 வெற்றிகளை இலங்கை அணியும், 3 வெற்றிகளை அவுஸ்திரேலிய அணியும் தமதாக்கியுள்ளன. இதேவேளை, இரு அணிகளுக்கு இடையிலான 2வதும் இறுதியான T20 போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sri Lanka's spinner Sachithra Senanayake (C) celebrates with his teammates after he dismissed Australia's David Warner (L) during the first T20 international cricket match between Sri Lanka and Australia at the Pallekele International Cricket Stadium in Pallekele on September 6, 2016. / AFP / LAKRUWAN WANNIARACHCHI        (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

Related posts: