இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு 400 மில்லியன் வருமானம்!

Friday, March 10th, 2017

2016 ஆம் ஆண்டிற்கான வாரியத்தின் நிதிக் கூற்று அறிக்கையானது, இம்முறை உறுதியான வளர்ச்சியை காண்பித்துள்ளதோடு திருப்தி அளிக்கும் விதமாகவும் இருக்கின்றது என கூறப்படுகிறது.

நாங்கள் வெற்றிகரமாக ஒரு வருடத்தினை கடந்துள்ளோம், 2016 ஆம் ஆண்டில் சவால்களை சரியான முறையில் சந்தித்து எதிர்பாராத மைல் கல் ஒன்றினை எட்டியுள்ளோம். அத்துடன் தற்காலிக செயற்குழு 2016ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறையாக இருப்பதாக, சுட்டிக் காட்டிய ரூபா. 320  மில்லியனை சவாலாக எடுத்து வெற்றிகரமாக அதனை தாண்டியுள்ளோம்.  (சீர் செய்துள்ளோம்). அதே நேரத்தில், சுயாதீனமான முறையில் செயற்பட்டு வருமானத்தினை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு செலவினங்களையும் குறைத்துள்ளோம்.“  என இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர், மாண்புமிகு திலங்க சுமதிபால அவர்கள் தெரிவித்திருந்தார்.

அத்துடன், செலவீனங்களை குறைக்கும் முகமாக எதிர் வரும் காலத்தில் வினைத்திறனான நடவடிக்கைகளை செயற்படுத்தவுள்ளதோடு, தேசிய அணியினை முதன்மைப்படுத்தும் விதமான முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் மூலம் கிடைக்கப்பெறும் இலாபங்களை நீண்ட காலத்திற்கு உபயோகப்படுத்தும் விதமாக வைக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

“2016 ஆம் ஆண்டினை, மேலதிக ரூபா. 200 மில்லியன் உடன் நாங்கள் முடித்திருப்பதனை கூற மகிழச்சியடைந்துள்ளேன். அத்துடன், இவை அனைத்தும் ஓர் இரவில் இடம்பெற்ற சம்பவங்கள் இல்லை. ஒரு அணியாக இருந்து கடின உழைப்பு மூலம் பெறப்பட்டவையே இவை, அத்துடன், எங்களை இந்த இடத்தில் நம்பிக்கையுடன் வைத்த மக்களும் வழிகாட்டுதலாய் இருந்தனர்.“ என்று மேலும் தெரிவித்திருந்தார்.

இறுதியாக கிரிக்கெட் வாரியத்தலைவர், தேசிய சபையின் வேண்டுகோளிற்கு அமைவாக, சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் மே மாதம் 31 ஆம் திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“மார்ச் மாதம் 31 ஆம் திகதி பொதுக்கூட்டம் இருந்த காரணத்தினால், நாங்கள் பெப்ரவரிமாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் கணக்குகளை முடிக்க வேண்டியிருந்தது. ஆனால், தேசிய சபை மாண்புமிகு அமைச்சரிடம் திகதியினை நீடிக்க விடுத்த வேண்டுகோளின் காரணமாக, சபையின் வருடாந்த பொதுக் கூட்டம் மே மாதம் 31ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது“ என கூறினார்.

Related posts: