25 பிரபல பாடசாலைகளின் தரம் 1அனுமதியில் முறைகேடு!

Tuesday, January 17th, 2017

நாடெங்குமுள்ள பிரபல அரச பாடசாலைகளில் தரம் ஒன்று அனுமதியின் போது நடந்துள்ள ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இத்தகைய பிரபல பாடசாலைகளில் இவ்வருட 1ஆம் ஆண்டு அனுமதியில் ஏராளமான ஊழல்களும், முறைகேடுகளும் நடந்திருப்பதாக கல்வியமைச்சுக்கு கிடைத்திருந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்துமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வியமைச்சு அதிகாரிகள் குழு விசாரணையை மேற்கொண்டது.

கொழும்பு றோயல் கல்லூரியில் மாத்திரம் 31மாணவர்கள் சட்ட விரோதமாக முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவும் அனைத்துப் பாடசாலைகளிலும் மாணவர்கள் தொடர்பான போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அம் மாணவர்களின் அனுமதிகள் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியது.

போலி வீட்டுரிமைப் பத்திரம் உட்பட பல்வேறு போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வாகனத் தரிப்பிடங்கள், காவல் கூடுகள், பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள், தூதராலயங்கள், கட்டப்பட்டு வரும் கட்டடங்கள், வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் வீடு உள்ளிட்ட பல்வேறு போலி முகவரிகள் றோயல் கல்லூரிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டிருப்பதாகவும், இத்தகைய முறைகேடான அனுமதிகள் அனைத்தும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Ministry_of_Education

Related posts: