இன்றுமுதல் சேவைகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டிருந்தும் தபால் சேவைகள் முமுமையாக இடம்பெறவில்லை – மக்கள் அதிருப்தி!
Monday, May 4th, 2020
நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்றுமுதல் வழமைபோல் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் இன்றும் தபால் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சின் கீழ் உள்ள தொழிற்சங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய தபாலக ஊழியர்களுக்கான சுகாதார பாதுகாப்பு பொறிமுறைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் கணிகளைத் தொடர்ந்து கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் சில தபாலகங்களில் இன்றும் வைத்தியசாலை மூலமாக விநியோகிக்கப்படும் மருந்து வகைகளை மட்டும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வினியோகிக்கும் நடவடிக்கை முன்னொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பொது மக்களுக்குரிய வேறு சேவைகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிவேக நெடுஞ்சாலையில் செல்லும் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை!
தேர்தல்கள் முறைப்பாடு தொடர்பில் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்!
ஊர்காவற்துறை பாடசாலை மின் துண்டிப்பு விவகாரம் - வடக்கின் பிரதம செயலாளர் தலையீடு - மீண்டும் வழங்கப்ப...
|
|
|


