இந்தியப் பிரஜைகளே திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா பரவியமைக்கு காரணம் – சுகாதாரா அதிகாரிகள் தெரிவிப்பு!

Monday, October 5th, 2020

கம்பஹா திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா பரவியமைக்கு காரணம் அங்கு வந்த இந்தியப் பிரஜைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த உண்மைத் தகவலை அறிவதற்கான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

திவுலுப்பிட்டியவில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு குளிரூட்டிகளைத் திருத்தும் குழுவொன்று வந்ததாகவும் அதில் இந்தியப் பிரஜைகளும் இருந்ததாகவும் அங்கு தொழில்செய்யும் ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, குறித்த ஆடைத் தொழிற்சாலையின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று பயிற்சிக்காக அண்மையில் இந்தியா சென்று வந்தாகவும் கூறப்படுகின்றது.

இவர்களின் ஊடாகவே மேற்படி ஊழியர்களுக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் இதனை உறுதிசெய்வதற்கான விசாரணைகளை நடத்திவருவதாக சுகாதாரா அதிகாரிகள் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ். வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டு...
ரஷ்யா , சீனாவின் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்- தொற்ற...
அனைத்து அத்தியாவசிய இறக்குமதி பொருட்களின் விலையை அதிகரிக்க கோரிக்கை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...