வெளிநாடுகளுக்கு சென்று அதிக குடிமக்கள் வாழும் மூன்று நாடுகளுள் இலங்கையும் ஒன்று – நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன சுட்டிக்காட்டு!

Saturday, October 7th, 2023

வெளிநாடுகளுக்கு சென்று அதிக குடிமக்கள் வாழும் மூன்று நாடுகளுள் இலங்கையும் ஒன்று என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சதவீதத்தின் அடிப்படையில், இலங்கை இந்த எண்ணிக்கையைப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, கடந்த 2022ஆம் ஆண்டில் 300,000 க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு தொடர்பிலான கூட்டத்தை ஒத்திவைக்கும் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே எரான் விக்கிரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், தொழில் வல்லுநர்கள் மீதான வரிச் சுமையால், தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதனால் சுகாதாரத் துறை நாளுக்கு நாள் பிரச்னைகளை சந்தித்து வருகின்றது. ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பிரச்சினைகள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன.” எனவம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: