சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விசேட சட்டமூலம்!

Friday, November 25th, 2016

சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுபடுத்த புதிய சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவைக்கு, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

சமூக ஊடக வலையமைப்புகளை பயன்படுத்தி இனவாதம் மற்றும் மதவாதங்கள் பரப்பப்படுவதனை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான சட்டமூலம் அவசியம் என நீதி அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பெரும்பான்மையினர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நீதி அமைச்சர் கூறுவதற்கமைய சமூக ஊடக வலையமைப்புகளை கட்டுபடுத்த புதிய சட்டமூலம் கொண்டுவருவது நகைச்சுவையான ஒரு விடயம் என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக யாராவது ஊ சத்தமிட்டால் அதனை விட சத்தமாக ஊ சத்தமிட அரசாங்கம் தெரிந்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்கள் என்னதான் கூறினாலும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இலங்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனைத்து ஊடக உரிமைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்திருந்தார். அதேபோல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போதும் ஹிலரி கிளின்டன் சமூக வலைத்தளங்களின் முழுமையான ஆதரவினை பெற்றிருந்தபோதும் தோல்வி சந்தித்தார் என மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.


5105974

Related posts: